இமாச்சலப் பிரதேசத்தின் அபாயகரமான மலைப்பாதையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று, வளைவில் திரும்ப முடியாமல் கட்டுப்பாட்டை இழந்து நேராகப் பள்ளத்தாக்கில் விழுந்து பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பார்ப்பவர்களின் நெஞ்சை பதற வைக்கும் இந்த விபத்தின் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

​மலைப்பிரதேசங்களில் வாகனம் ஓட்டுவது என்பது அனைவருக்கும் கைவந்த கலை அல்ல என்றும், மிகச்சிறிய கவனக்குறைவு கூடப் பெரிய உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தும் என்றும் இந்த விபத்து எச்சரிக்கிறது. மலைச்சாலையில் அனுபவம் இல்லாதவர்கள் வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், வளைவுகளில் வேகத்தைக் குறைக்க வேண்டும் என்றும் போக்குவரத்துத் துறையினர் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.