ஹாலிவுட் திரையுலகின் பிரபல இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவான ‘தி ஒடிசி’ திரைப்படம், உலகளவில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. புதிய திரைப்படங்களின் போட்டிகளுக்கு மத்தியிலும், இந்தியாவில் இத்திரைப்படம் தொடர்ந்து சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்திய பாக்ஸ் ஆபிஸில் ‘தி ஒடிசி’ திரைப்படம் இதுவரை ரூ.129.15 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து புதிய சாதனையைப் படைத்துள்ளது. ரசிகர்களின் அமோக ஆதரவால் திரையரங்குகளில் இத்திரைப்படம் வசூல் மழையைப் பொழிந்து வருகிறது.
ஹாலிவுட் முன்னணி நடிகர் மேட் டாமன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இத்திரைப்படம், உலகளவில் இதுவரை 368 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.3,200 கோடி) வசூலித்துள்ளது.
பிரமாண்டமான தயாரிப்பில் உருவான இத்திரைப்படம், உலகளவில் ரசிகர்களின் பெருவாரியான ஆதரவுடன் தொடர்ந்து அனைத்து திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
