ஐபிஎல் 2026 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, தனது அதிரடி பேட்டிங்கால் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 400 ரன்களைக் குவித்துள்ள அவர், ஆரஞ்சு கேப் ரேஸில் முதலிடத்தில் உள்ளார். நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் அளித்த சிறப்பான தொடக்கத்தால், ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
Vaibhav Sooryavanshi forgot to wear his shoes and then asked someone to bring them onto the ground 😭
Romi Bhinder is literally taking care of him like a father 🫡 pic.twitter.com/3TayVsGf78
— TEJASH (@Tejashyyyyy) April 29, 2026
இருப்பினும், இந்தப் போட்டியின் போது ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்தது. பீல்டிங் செய்வதற்காக மைதானத்திற்குள் வந்த வைபவ், அவசரத்தில் காலில் ஷூ போடாமலேயே வந்துவிட்டார். தனது தவறை உணர்ந்த அவர் உடனடியாக டிரஸ்ஸிங் ரூமை நோக்கி சைகை காட்டி ஷூவைக் கேட்டார். அங்கிருந்த ரோமி பிந்தர் அவருக்கு உதவி செய்தார். இந்த வேடிக்கையான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
