ஐபிஎல் 2026 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், வெறும் 36 பந்துகளில் சதம் விளாசி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் தனது பக்கம் திருப்பியுள்ளார் 15 வயதே ஆன வைபவ் சூரியவன்ஷி. 2025 ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் வெறும் 13 வயதில் எடுக்கப்பட்டபோது எழுந்த சர்ச்சைகளுக்கு, தற்போது தனது பேட் மூலம் அதிரடி பதிலடி கொடுத்து வருகிறார் இந்த இளம் புயல். இதுவரை விளையாடிய 15 போட்டிகளில் 609 ரன்கள், 2 சதங்கள் மற்றும் 3 அரைசதங்கள் என வைபவ் காட்டி வரும் வேகம், அவரை உடனடியாக இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வலுக்கச் செய்துள்ளது.
वैभव सूर्यवंशी के साथ का खिलाडी ने बताई वैभव की रियल उम्र 🤔 pic.twitter.com/BceyP1mMwL
— सीतामढ़ी जिला 🇮🇳 (@SitamarhiJila) April 26, 2026
ஒருபுறம் சாதனைகள் குவிந்தாலும், வைபவ்வின் வயது குறித்த கேள்விகள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், அவரது சிறுவயது நண்பர் என கூறிக்கொள்ளும் ஒருவர், வைபவ்வின் பிறந்த தேதி குறித்த சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். இது அவரது வயது குறித்த விவாதத்தை மீண்டும் சூடாக்கியுள்ளது. இதற்கிடையில், ஜூன் மாதம் நடைபெறவுள்ள அயர்லாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் வைபவ் இடம் பெறக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. selectors-களே இப்போதே இவரைத் தேர்வு செய்ய ஆர்வம் காட்டி வருவதுதான் இப்போதைய ஹாட் நியூஸ்!
