“அந்த 15 வயதுச் சிறுவன் வைபவ் சூரியவன்ஷி அடிக்கும் அடிகளைப் பார்த்தால், அது சாதாரண மனிதன் அடிப்பது போலத் தெரியவில்லை; அவன் பேட்டில் ஏதேனும் ஏஐ (AI) சிப் பொருத்தப்பட்டிருக்குமோ என்று சந்தேகமாக இருக்கிறது” எனப் பாகிஸ்தான் கிரிக்கெட் நிபுணர் டாக்டர் நெளமன் நியாஸ் பேசியிருப்பது கிரிக்கெட் உலகில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. ஐபிஎல் 2026 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 36 பந்துகளில் சதம் விளாசி வைபவ் படைத்த சாதனை, தற்போது எல்லை தாண்டி பாகிஸ்தானிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

​வீரர்களுக்கு ஊக்க மருந்து சோதனை செய்வது போல, வைபவ்வின் பேட்டையும் ஆய்வகத்திற்குக் கொண்டு சென்று சோதனை செய்ய வேண்டும் என்று நெளமன் நியாஸ் வலியுறுத்தியுள்ளார். ஒரு சிறுவனின் அசுரத்தனமான ஆட்டத்தைப் பார்த்து மிரண்டு போன பாகிஸ்தான் தரப்பு, இப்படி ஒரு வினோதமான காரணத்தைக் கூறி வருவது இந்திய ரசிகர்களிடையே சிரிப்பையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. “தோல்வி பயத்தில் என்ன பேசுவது என்றே தெரியாமல் பாகிஸ்தான் கிரிக்கெட் உலகம் உளறி வருகிறது” என இந்திய நெட்டிசன்கள் இதற்குப் பதிலடி கொடுத்து வருகின்றனர்.