மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில், மிளகாய் வியாபாரி தேவ்கிருஷ்ண புரோஹித் கொல்லப்பட்ட வழக்கில் அவரது மனைவியே சூத்திரதாரி என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. பிரியங்கா என்ற அந்தப் பெண், கம்லேஷ் என்பவருடன் நீண்ட நாட்களாகக் காதலில் இருந்துள்ளார்.

கணவரைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்த இவர்கள், சுரேந்திர பாட்டி என்ற நபர் மூலம் ஒரு லட்சம் ரூபாய்க்கு சுப்பாரி கொடுத்துள்ளனர். கடந்த ஏப்ரல் 7-ம் தேதி இரவு, திருடர்கள் போல வீட்டிற்குள் நுழைந்த கும்பல் கணவனைக் கொன்றுவிட்டு, நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றதாகப் பிரியங்கா நாடகமாடியுள்ளார்.

ஆனால், காவல்துறையினரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் பிரியங்கா முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் சந்தேகம் வலுத்தது. கைரேகை நிபுணர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்கள் உதவியுடன் நடத்தப்பட்ட விசாரணையில், மனைவியே காதலனுடன் சேர்ந்து இந்தக் கொலையைச் செய்தது உறுதியானது.

11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தும், குடும்பத்தில் அடிக்கடி சண்டையிட்டு வந்த பிரியங்கா, தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனைத் திட்டமிட்டுக் கொன்றுள்ளார்.

“>

 

தற்போது பிரியங்கா மற்றும் அவரது காதலன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தப்பியோடிய மற்றொரு குற்றவாளியைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.