பிரபல நடிகை ஹன்சிகா, தனது முன்னாள் நாத்தனாரும் சின்னத்திரை நடிகையுமான முஸ்கான் நான்சி ஜேம்ஸ் மீது மும்பை நீதிமன்றத்தில் ரூ.2 கோடி இழப்பீடு கேட்டு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். ஹன்சிகாவின் சகோதரரை திருமணம் செய்து பிரிந்த முஸ்கான், சமூக வலைதளங்களில் ஹன்சிகாவின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஹன்சிகாவிடம் வாங்கிய ரூ.27 லட்சம் கடனைத் திருப்பித் தராமல் இருக்கவே முஸ்கான் இது போன்ற அவதூறுகளைப் பரப்புவதாக ஹன்சிகா குற்றம் சாட்டியுள்ளார். இதற்கிடையில், முஸ்கான் தன் மீது சுமத்தியுள்ள கொடுமை மற்றும் துன்புறுத்தல் புகார்கள் அனைத்தும் பொய்யானவை என்று ஹன்சிகா மறுத்துள்ளார். ஆதாரமற்ற இந்த புகாரை ரத்து செய்யக் கோரி அவர் மும்பை உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
முஸ்கான் தனது ஆடம்பர வாழ்க்கையை சமூக வலைதளங்களில் காட்டிக்கொள்கிறார், ஆனால் வாங்கிய கடனைத் தர மறுப்பதோடு குடும்பத்தினர் மீது வீண் பழி சுமத்துகிறார் என்றும் ஹன்சிகா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குடும்ப மோதல் தற்போது சட்ட ரீதியாகப் பெரிய அளவில் வெடித்துள்ளது.
