உத்தரப்பிரதேச மாநிலம், சகாரன்பூரில் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடுத்தெருவில் முதியவர் ஒருவரை, அவருடைய சொந்த மகனே கடுமையாகத் தாக்கும் காட்சிகள் அடங்கிய சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் பெத்த தந்தை என்றும் பாராமல், நடுரோட்டில் வைத்து அவரை மகன் தாக்கும் இந்த மனிதாபிமானமற்ற செயல் பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தக் கொடூரச் செயலுக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் கடுமையான கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

இச்சம்பவம் தொடர்பாகப் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வயதான காலத்தில் தந்தையைப் பாதுகாப்பாகப் பராமரிக்க வேண்டிய மகனே, இத்தகைய வன்முறையில் ஈடுபட்டிருப்பது சமூகத்தில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.