ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவும் பதற்றமான சூழலில், பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டிய உணவுப் பொருட்கள் ஏற்றிய கப்பலை ஈரான் தடுத்து நிறுத்தியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து பாகிஸ்தானின் கராச்சி நோக்கிச் சென்ற ‘செலன்’ என்ற அந்தக் கப்பல், ஈரானிய பாதுகாப்புப் படையினரால் இடைமறிக்கப்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த பாகிஸ்தானுக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஆனால், ஆச்சரியப்படும் விதமாக அந்தச் சம்பவம் இந்தியாவுக்குச் சாதகமாக முடிந்துள்ளது.

தற்போது அந்தப் பாகிஸ்தான் கப்பல் தனது பாதையை மாற்றி, இந்தியாவின் மும்பை துறைமுகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. ஏப்ரல் 9-ஆம் தேதிக்குள் இக்கப்பல் இந்தியாவை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்கள் ஈரானின் அனுமதியைப் பெற வேண்டியது கட்டாயம் என்ற நிலையில், இந்தியாவுக்கு மட்டும் ஈரான் தொடர்ந்து சிறப்பு அனுமதி அளித்து வருகிறது.

இது பாகிஸ்தான் மற்றும் ஈரான் இடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளதுடன், சர்வதேச அளவில் இந்தியாவின் முக்கியத்துவத்தை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.