ரயில் பயணத்தின் போது மேல் படுக்கையில் அமர்ந்திருந்த பயணி ஒருவர், கீழே நடந்து செல்லும் வியாபாரிகளின் கூடையிலிருந்து தின்பண்டங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்களைத் திருடும் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

‘எக்ஸ்’ (X) தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், வியாபாரிகள் தலையில் கூடையை வைத்துக்கொண்டு தங்குதடையின்றி நடந்து செல்லும்போது, அந்த நபர் யாருக்கும் தெரியாமல் கைகளை நீட்டிப் பொருட்களைத் திருடுவது தெளிவாகப் பதிவாகியுள்ளது.

வியாபாரிகள் இதைக் கவனிக்காமல் கடந்து செல்ல, அந்தப் பயணி மீண்டும் மீண்டும் இதே செயலைச் செய்வது காண்போரை ஆத்திரமடையச் செய்துள்ளது.

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் அந்தப் பயணியின் செயலைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இது வறுமையினால் செய்யப்பட்ட காரியம் அல்ல, பொது ஒழுக்கம் இல்லாததே இதற்குக் காரணம் எனப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

“>

 

மிகக் குறைந்த லாபத்திற்காகக் கடினமாக உழைக்கும் சிறு வியாபாரிகளின் வயிற்றில் இத்தகைய நபர்கள் அடிப்பது வேதனையானது என்றும், அருகில் இருந்த மற்ற பயணிகள் ஏன் இதைத் தட்டிக்கேட்கவில்லை என்றும் சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன.

பொது இடங்களில் சக மனிதர்களிடம் காட்ட வேண்டிய பொறுப்புணர்வு குறித்து இந்தச் சம்பவம் பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது.