மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 70 வயது மூதாட்டியான தீபாலி கோஷின் வாழ்க்கை, சமூக வலைதளங்களின் உதவியால் இப்போது முற்றிலும் மாறியுள்ளது. மிகவும் சிரமத்தில் இருந்த இவரது நிலையை ஆராதனா சாட்டர்ஜி என்ற இன்ஸ்டாகிராம் பயனர் வீடியோவாக வெளியிட்டு உதவி கோரினார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, பலரும் உதவிக்கரம் நீட்டினர். இதனால், தீபாலி நடத்தி வந்த சிறிய அரிசிக் கடை தற்போது புதிய பொலிவுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

புதிதாக மாற்றப்பட்ட கடையில் புது உடைகளுடன், புன்னகையோடு தீபாலி கோஷ் அமர்ந்திருக்கும் வீடியோ தற்போது வெளியாகி அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. “பணம் மகிழ்ச்சியைத் தராது என்று யார் சொன்னது? மற்றவர்களுக்கு உதவி செய்து பாருங்கள்” எனப் பலரும் இந்த வீடியோவில் நெகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Aradhana Chatterjee (@storiesbyaradhana)

“>

ஒரு முதியவரின் வாழ்வாதாரத்தை மீட்க இளைஞர்களும் சமூக வலைதளங்களும் கைகோர்த்த இந்தச் சம்பவம், மனிதநேயத்திற்குச் சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது.