சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ, சாலை பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தையும் அதிரடியாக உணர்த்தியுள்ளது.

அந்த வீடியோவில், ஒரு இளைஞர் தனது பைக்கில் சாலையில் வேகமாகச் சென்றுகொண்டிருக்கும்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பேருந்தின் பின் சக்கரத்திற்கு அடியில் விழுகிறார்.

பார்ப்பவர்களின் நெஞ்சையே பதறவைக்கும் இந்த விபத்தில், அந்த இளைஞரின் தலை பேருந்தின் சக்கரத்தில் சிக்க வேண்டிய தருணத்தில், அவர் அணிந்திருந்த ஹெல்மெட் ஒரு கவசமாகச் செயல்பட்டு அவரது உயிரைக் காப்பாற்றியுள்ளது.

இந்த விபத்தைக் கண்டதும் அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக விரைந்து வந்து, பேருந்து அடியில் சிக்கியிருந்த இளைஞரை மீட்டனர். அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், தற்போது அவர் நலமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“>

 

ஹெல்மெட் அணியாமல் இருந்திருந்தால் அந்த இளைஞர் அங்கேயே உயிரிழந்திருக்கக்கூடும். இந்தச் சம்பவம், ஹெல்மெட் என்பது போக்குவரத்து அபராதத்தில் இருந்து தப்பிக்க மட்டுமல்ல, நமது உயிரைப் பாதுகாக்கவே என்பதை மீண்டும் ஒருமுறை உலகிற்கு உரக்கச் சொல்லியுள்ளது.