காதலர் தினமான பிப்ரவரி 14 அன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரங்கேறிய இரு வேறு மோதல் சம்பவங்கள் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஹாப்பூர் பகுதியில், தனது மனைவி மற்றொரு நபருடன் இருப்பதை நேரில் கண்ட கணவன், ஆத்திரமடைந்து அந்த நபரைத் தாக்கத் தொடங்கினார். ‘கர் கா கலேஷ்’ (Ghar ka kalesh) எனும் எக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள அந்த வீடியோவில், கணவன் அந்த நபரைத் தாக்கும்போது, மனைவி தனது காதலனைப் பாதுகாக்க முற்படும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த மோதல் அந்தப் பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
Valentine-Day Kalesh (High-voltage drama on Valentine's Day in Hapur Husband caught his wife with lover. Fierce brawl right in the middle of the street. Valentine's Day consequences start rolling in. Watch the video…)pic.twitter.com/92BWjvskeS
— Ghar Ke Kalesh (@gharkekalesh) February 14, 2026
இதேபோல், சோன்பத்ரா மாவட்டத்தின் ஷாப்பிங் மால் ஒன்றில் மற்றொரு விசித்திரமான சம்பவம் நிகழ்ந்தது. தனது காதலியுடன் ஷாப்பிங் வந்த ஒரு நபரை, அவரது மனைவி எதிர்பாராத விதமாக நேரில் சந்தித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி, அந்தப் பெண்ணுடன் கடும் வாக்குவாதத்திலும் மோதலிலும் ஈடுபட்டார். இந்தத் திடீர் மோதலால் அதிர்ச்சியடைந்த அந்த நபர், தனது மனைவி மற்றும் காதலி இருவரையும் அங்கேயே விட்டுவிட்டு அவ்விடத்திலிருந்து தப்பி ஓடினார். பொது இடங்களில் நடந்த இந்த இரு சம்பவங்களும் தற்போதைய இணைய விவாதங்களில் முக்கிய இடம்பிடித்துள்ளன.
