உத்தரப்பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில், கிராமப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் புதிதாகப் போடப்பட்டு வந்த சிமெண்ட் (RCC) சாலையை, சமாஜ்வாதி கட்சித் தொண்டர் ஒருவர் தனது பார்ச்சூனர் காரால் நாசமாக்கிய வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. சாலைப் பணிகள் முடிந்து சிமெண்ட் இன்னும் காயாத நிலையில், காரில் இருந்த அந்த நபர் வேண்டுமென்றே அதன் மேல் வண்டியை ஓட்டிச் சென்றுள்ளார். இதனால் அந்தப் புதிய சாலை முழுவதுமாகச் சேதமடைந்தது. அங்கிருந்த கிராம மக்கள் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து வீடியோ எடுக்க, அந்த காரில் சமாஜ்வாதி கட்சியின் கொடி பறப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
उत्तर प्रदेश के औरैया जिले में सपा नेता ने निर्माणाधीन RCC सड़क पर दौड़ा दी फॉर्च्यूनर,सोशल मीडिया पर वायरल हुआ वीडियो#UttarPradesh | #ViralVideo pic.twitter.com/KmI8JPwDd4
— NDTV India (@ndtvindia) February 14, 2026
இந்த வீடியோவை தனது எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்துள்ள பாஜக, “கட்சிக் கொடி கட்டிய காரில் ஒரு ரவுடி அமர்ந்திருக்கிறார்” என மிகக் கடுமையாகச் சாடியுள்ளது. அகிலேஷ் யாதவின் தொண்டர்கள் மக்கள் நலத் திட்டங்களையும், வளர்ச்சிப் பணிகளையும் திட்டமிட்டுச் சீர்குலைப்பதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. எர்வாகத்ரா பிளாக்கில் நடந்துள்ள இந்த அராஜகச் செயல் குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் அனல் பறக்கின்றன. வளர்ச்சிப் பணிகளை மதிக்காமல் இப்படிச் செயல்படும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
