மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் சிம்லாவின் அழகிய மலைப்பாதையில், கார் ஓட்டப் பழகிய பெண்ணொருவர் தனது காரோடு பள்ளத்தாக்கில் விழுந்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், மனைவி டிரைவிங் சீட்டில் இருக்க, அவரது கணவர் காரின் வெளியே நின்று அவருக்கு வழிகாட்டுகிறார்.
ஒரு குறுகிய வளைவில் காரைத் திருப்ப முயலும்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், கண் இமைக்கும் நேரத்தில் பல அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கிற்குள் தலைகுப்புற விழுந்தது. மலைப்பாதைகளில் கார் ஓட்டிய அனுபவம் இல்லாததே இந்த விபத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்தின்போது கார் ஆழமான பள்ளத்தில் இருந்த மரங்கள் மற்றும் புதர்களுக்கு இடையே சிக்கிக்கொண்டது. அடர்த்தியான செடிகொடிகள் காரின் வேகத்தைக் குறைத்திருக்கலாம் என்பதால், அந்தப் பெண் உயிர் தப்பியிருக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
Teaching someone driving at such a dangerous location either has to be planned or pure high level stupidity. Video from Shimla shows a husband guiding his wife from outside while she was driving, she lost control and the car fell into a gorge. pic.twitter.com/CaQQly4hDT
— Nikhil saini (@iNikhilsaini) February 13, 2026
“>
எனினும், அவரது தற்போதைய நிலை குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. “மலைப்பாதைகளில் போதிய அனுபவம் இல்லாமல் வாகனம் ஓட்டுவது உயிருக்கே ஆபத்தாக முடியும்” என்று இந்த வீடியோவைப் பார்க்கும் நெட்டிசன்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
