ராஜஸ்தான் மாநிலம் நாகௌர் மாவட்டம் மெர்டா நகரில் உள்ள நகைக்கடை ஒன்றிற்குள் நள்ளிரவில் புகுந்த முகமூடி அணிந்த மர்ம கும்பல், கடையின் உரிமையாளரை கத்தியால் குத்தி கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரம்மபுரி பகுதியில் உள்ள உமா ஜெயின் என்ற நகைக்கடையில் உரிமையாளர் பங்கஜ் சோனி மற்றும் இரண்டு ஊழியர்கள் பணியில் இருந்தபோது, உள்ளே நுழைந்த மூன்று பேர் கொண்ட கும்பல் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவர்களைச் சரமாரியாகக் குத்தியது.

 

இதில் படுகாயமடைந்த பங்கஜ் சோனி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், மற்ற இரண்டு ஊழியர்களும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த பங்கஜ் சோனி தேசிய ஜனநாயகக் கட்சியின் முக்கிய நிர்வாகியின் சகோதரர் என்பதால் இந்த விவகாரம் அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், கடையில் இருந்த கண்காணிப்புக் கேமரா காட்சிகளின் அடிப்படையில் கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.