கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டத்தில் காங்கிரஸ் பிரமுகர் மதீன் படேல் தனது ஆதரவாளர்களுடன் துப்பாக்கியைக் காட்டியபடி நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் வெளியான திரைப்பட பாடல் ஒன்றிற்கு காரில் இருந்தபடி அதிரடியாகக் களமிறங்கும் மதீன் படேல், பின்னர் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து துப்பாக்கிகளுடன் நடனமாடி போஸ் கொடுக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

 

இது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் துப்பாக்கி கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் செயல் என நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அந்த வீடியோவில் இருப்பது உண்மையான துப்பாக்கி அல்ல என்றும் அது வெறும் விளையாட்டுத் துப்பாக்கி என்றும் மதீன் படேல் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அஃப்சல்பூர் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஒய். பாட்டீலின் நெருங்கிய ஆதரவாளராகக் கருதப்படும் மதீன் படேலின் இந்தச் செயல் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சட்ட விதிகள் ஏதேனும் மீறப்பட்டுள்ளதா என்பது குறித்து கலபுரகி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.