சிவகங்கை மாவட்டம், பிரசித்தி பெற்ற மடப்புரம் காளியம்மன் கோயிலில் காவலாளியாகப் பணியாற்றி வந்த அஜித் குமார் என்பவர், கடந்த காலங்களில் நகை திருடியதாகத் தனிப்படை போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாக மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் தொடக்கத்தில் பொய்ப் புகார் அளித்ததாகக் கூறப்படும் நிகிதா என்பவருக்கு நீதிமன்றம் தற்போது சம்மன் அனுப்பியுள்ளது.

அதன்படி, வரும் மார்ச் 4-ஆம் தேதி நிகிதா நேரில் ஆஜராக வேண்டும் என மதுரை நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. போலீஸ் தாக்குதலால் ஒரு உயிர் பறிபோன வழக்கில், பொய்ப் புகார் கொடுத்த நபர் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது இந்த வழக்கில் மேலும் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.