கேரளாவில் ஒரு வீட்டின் மொட்டை மாடி வழியாக உள்ளே நுழைய முயன்ற திருடன் ஒருவனை, அங்கிருந்த குடியிருப்பாளர்கள் கையும் களவுமாகப் பிடித்தனர்.

மேலும் தான் மாட்டிக்கொண்டதை உணர்ந்த அந்தத் திருடன், திடீரென மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வதாகக் கூறி அங்கிருந்தவர்களை மிரட்டத் தொடங்கினான். அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதையடுத்து, உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

“>

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கீழே பாதுகாப்பு வலையை விரித்து தயாராக நின்றனர். எதிர்பாராதவிதமாக அந்தத் திருடன் மாடியிலிருந்து கீழே குதித்தபோது, தீயணைப்பு வீரர்கள் தங்களது துரித செயலால் அவனை வலையில் பத்திரமாகப் பிடித்து, காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.