தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த நாகேஷ் என்பவருக்கும், சுஜாதா என்ற பெண்ணுக்கும் திருமணத்தைத் தாண்டிய தொடர்பு இருந்து வந்தது. இவர்களது உறவுக்கு நாகேஷின் மனைவி மம்தா தடையாக இருப்பதாகக் கருதிய சுஜாதா, அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டார்.

இதற்காக மறைமுகமாகத் தயார் நிலையில் வந்த சுஜாதா, வீட்டில் தனது 6 மாதக் குழந்தைக்குப் பாலூட்டிக் கொண்டிருந்த மம்தா மீது திடீரென பெட்ரோல் ஊற்றித் தீ வைத்தார்.

உடல் முழுவதும் தீப்பற்றிய நிலையிலும், தனது குழந்தையைக் காப்பாற்ற வேண்டும் என்ற துடிப்பில் மம்தா குழந்தையைத் தூரமாக வீசினார். இதில் மம்தா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

காயம் அடைந்த குழந்தை தற்போது தீவிர சிகிச்சைக்காக ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், காவல் நிலையத்தில் சரணடைந்த சுஜாதாவைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.