பள்ளி ஆண்டு விழா என்றாலே மேடையில் அரங்கேறும் குழந்தைகளின் மழலைத்தனமான கலாட்டாக்கள் தனி ரகம் தான். அந்த வகையில், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், வண்ணமயமான உடையில் குழந்தைகள் மேடையில் மிகத் தீவிரமாக நடனமாடிக் கொண்டிருக்கின்றனர்.
அப்போது திடீரென நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மேடையைச் சுற்றி ‘ஸ்மோக் எஃபெக்ட்’ (Smoke Effect) எனப்படும் புகை வெளியேற்றப்பட்டது. இதனைச் சற்றும் எதிர்பார்க்காத ஒரு குழந்தை, ஏதோ தீப்பிடித்துவிட்டது என நினைத்து மேடையிலிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தான். மற்றொரு குழந்தையோ, எங்கு செல்வது எனத் தெரியாமல் மேடையிலேயே நின்று கொண்டு அழத் தொடங்கியது.
Young Girls’ Dance Interrupted
After The Stage Smoke ScarEs Them
Mid-Performance | WATCH pic.twitter.com/vqHqjuVQMh— Ghar Ke Kalesh (@gharkekalesh) February 2, 2026
“>
பார்வையாளர்களை உற்சாகப்படுத்தச் செய்யப்பட்ட இந்தத் தொழில்நுட்ப வசதி, அந்தச் சிறு குழந்தைகளைப் பீதிக்குள்ளாக்கிய விதம், அங்கிருந்தவர்களிடையே பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியது. குழந்தைகளின் இந்த அப்பாவியான எதிர்வினைகளைக் கண்ட நெட்டிசன்கள், “அந்தப் பிள்ளைக்கு அது என்னனு தெரியலையே.. பாவம் பயந்துடுச்சு” என கமெண்ட் செய்து வருவதுடன், இந்த வீடியோவைப் பகிர்ந்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர்!
