திருமணக் கொண்டாட்டத்தின் போது புதுமணத் தம்பதிகள் மற்றும் உறவினர்கள் பால்கனியில் நின்று மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டபோது, எதிர்பாராத விதமாக பால்கனி இடிந்து விழுந்த அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறது.
அந்த வீடியோவில், தம்பதிகள் கீழே உள்ளவர்களுக்கு கை அசைத்துச் சிரித்துக் கொண்டிருக்கையில், திடீரென கட்டிடத்தின் முன்பகுதி பாரம் தாங்காமல் அப்படியே சரிந்து கீழே விழுகிறது. நொடிப் பொழுதில் நடந்த இந்தச் சம்பவத்தில் அங்கிருந்த அனைவரும் நிலைகுலைந்து கீழே விழுவதைக் கண்டு பார்ப்பவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
இந்த வீடியோ எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்ட சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது. பலரும் கட்டிடத்தின் பலவீனம் குறித்தும், அளவுக்கு அதிகமான நபர்கள் பால்கனியில் நின்றது குறித்தும் கவலை தெரிவித்து வரும் நிலையில், இந்த வீடியோ குறித்து ஒரு புதிய விவாதம் எழுந்துள்ளது.
இது உண்மையான விபத்து அல்ல என்றும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வீடியோ என்றும் பல பயனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
A balcony collapsed while people were celebrating on it at a wedding in Italy. pic.twitter.com/OwKzUWze56
— Gold Bell (@GoldBellClips) January 31, 2026
“>
தொழில்நுட்பத்தின் மூலம் மக்களைத் திசைதிருப்ப இது போன்ற வீடியோக்கள் உருவாக்கப்படுவதாகக் கூறப்பட்டாலும், இது பார்ப்பவர்களைப் பதற வைக்கும் வகையிலேயே அமைந்துள்ளது.
