வீடியோ கேம் வாங்குவதற்குப் பணம் தராததால், பெற்ற தாயையே பொது இடத்தில் வைத்து ஒரு சிறுவன் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் சீனாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கே மக்கள் கூட்டம் அதிகம் இல்லை என்றாலும், அங்கிருந்த ஒரு பெண் மட்டும் ஓடி வந்து அந்தச் சிறுவனைத் தடுக்கப் போராடினார். ஆனால் ஆத்திரத்தில் இருந்த அந்தச் சிறுவன், அந்தப் பெண்ணையும் பொருட்படுத்தாமல் தனது தாயைத் துரத்தித் துரத்தித் தாக்கியது பார்ப்பவர்களின் நெஞ்சைப் பதற வைத்தது.
A Chinese teenager brutally attacked his mother in public because she wouldn’t let him buy video games with her bank card. Everyone was shocked at his audacity. Many tried to intervene, but he seemed out of control, relentlessly chasing and hitting her. pic.twitter.com/iy4b0BCgN3
— GPX (@GPX_Press) January 31, 2026
வெறும் ஒரு விளையாட்டிற்காகத் தன் தாயை இப்படி நடுரோட்டில் வைத்து அடித்த அந்தச் சிறுவனின் செயல் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. ஒரு சிறுவன் தன் கட்டுப்பாட்டை இழந்து இவ்வளவு வன்முறையாக நடந்துகொண்டது தற்காலத் தலைமுறையினரின் கேமிங் போதை எவ்வளவு ஆபத்தானது என்பதை உணர்த்துகிறது.
