சமூக வலைதளங்களில் ஒரு சில நொடிகள் புகழ்பெற வேண்டும் என்ற ஆசையில், இளைஞர்கள் பலர் தங்கள் உயிரையே பணையம் வைத்து ஆபத்தான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஓடும் ரயிலின் வாசலில் தொங்கியபடி இளைஞர் ஒருவர் மிகவும் பயங்கரமான ஸ்டண்ட் செய்கிறார்.
ஒரு கையில் ரயிலைப் பிடித்துக்கொண்டு, கால்களை நடைமேடையை நோக்கி நீட்டி அவர் செய்யும் இந்தச் செயல் பார்ப்பவர்களைப் பதற வைக்கிறது. இவருக்குப் பின்னால் இருக்கும் மற்ற இளைஞர்களும் இதைத் தடுக்காமல் வேடிக்கை பார்ப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோ எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்டு லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்டுள்ளது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் அந்த இளைஞரின் பொறுப்பற்றத்தனத்தைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
“இவர்களுக்கு காவல்துறையினர் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்” என்றும், “உயிரோடு விளையாடும் இது போன்ற ‘ரீல்ஸ்’ மோகம் தேவையற்றது” என்றும் ஆவேசமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
He needs belt treatment
pic.twitter.com/Yq6wbNRBpN— Ghar Ke Kalesh (@gharkekalesh) January 28, 2026
“>
ஒரு சிறிய கைதவறல் கூட பெரும் உயிரிழப்பிற்கு வழிவகுக்கும் என்பதை உணராமல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.
