தமிழக சட்டமன்றத்தில் பேசிய நயினார் நாகேந்திரன், திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாகச் சுட்டிக்காட்டி சரமாரியான கேள்விகளை முன்வைத்தார்:

“அனைத்து உணவுப் பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை (MSP) வழங்கப்படும் என்று சொன்னீர்களே, அதைச் செய்தீர்களா?” எனத் திமுக அரசை நேரடியாகச் சாடினார்.

நெல் கொள்முதலின் போது விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ஊக்கத்தொகை மற்றும் நிலுவைத் தொகையை வழங்காமல் அரசு காலம் தாழ்த்துவதாகக் குற்றம் சாட்டினார்.

மழையினால் நெல்மணிகள் நனைந்து சேதமடைந்தபோது, அரசு உரிய நேரத்தில் கொள்முதல் நிலையங்களைத் திறக்காததே பெரும் நஷ்டத்திற்குக் காரணம். “நானும் டெல்டாகாரன் தான்” என்று சொல்லும் முதலமைச்சர், ஏன் விவசாயிகளின் துயரத்தில் பங்கெடுக்கவில்லை? என வினவினார்.

புதிய மின் இணைப்புகள் வழங்குவதில் உள்ள குளறுபடிகள் மற்றும் ரேஷன் கடைகளில் சிறுதானிய விற்பனை செய்யாதது குறித்தும் அவர் தனது கண்டனத்தைப் பதிவு செய்தார்.