ராய்ப்பூரில் நேற்று நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 209 ரன்கள் என்ற இமாலய இலக்கை விரட்டிய இந்திய அணிக்குத் தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. கடந்த போட்டியில் சதம் விளாசிய அபிஷேக் சர்மா ரன் ஏதுமின்றி ஆட்டமிழக்க, நீண்ட இடைவேளைக்குப் பிறகு அணியில் இடம்பிடித்த சஞ்சு சாம்சன் 5 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றமளித்தார்.
Mighty Sanju Samson is gone after a chance on zero #indvsnz pic.twitter.com/ULPDhAOJRl
— Muhammad Shahzad Khan (@imshahzadkhan19) January 23, 2026
சாம்சன் மீண்டும் ஒருமுறை கிடைத்த பொன்னான வாய்ப்பைத் தவறவிட்டதாக இணையவாசிகள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இருப்பினும், மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இஷான் கிஷன் (76) மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் (82) அதிரடியாக விளையாடி இந்தியாவை 15.2 ஓவர்களிலேயே வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
ஐந்து போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இந்தியா 2-0 என முன்னிலை வகிக்கும் நிலையில், சாம்சன் உலகக்கோப்பை அணியில் இடம்பிடிக்க எஞ்சியுள்ள போட்டிகளில் சோபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
