பீகார் மாநிலம் மோதிஹாரியில் புதன்கிழமை அன்று நடந்த சோகமான சாலை விபத்தில் 18 மாதக் குழந்தை உயிரிழந்தது. சட்டௌனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்போர்ட்ஸ் கிளப் பகுதியைச் சேர்ந்த ரியாஸ் என்பவரது மகன் சாகேத், வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சாலைக்கு வந்துள்ளான்.

அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த வாகனம் மோதியதில், அந்த இடத்திலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. விபத்தை ஏற்படுத்திய வாகன ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

இந்தச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் குழந்தையின் உறவினர்கள், மோதிஹாரி-டாக்கா பிரதான சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களைச் சமாதானப்படுத்தி குழந்தையின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக சதர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

“>

 

சிசிடிவி காட்சிகளின் மூலம் விபத்தை ஏற்படுத்திய வாகனம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், தப்பியோடிய ஓட்டுநரைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.