சமீபத்தில் இணையத்தில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோ, மனிதநேயம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை உலகிற்கு உணர்த்தியுள்ளது. பஞ்சாபி சீக்கிய டாக்ஸி டிரைவர் ஒருவரின் காரில் பயணம் செய்த வெளிநாட்டு பயணி ஒருவர், தன்னிடம் பணம் இல்லை என்றும் அடுத்த முறை தருவதாகவும் கூறுகிறார்.
இதைக் கேட்ட அந்த ஓட்டுநர், எந்தவித தயக்கமும் கோபமும் இன்றி, “பரவாயில்லை, நீங்கள் எப்போது வருகிறீர்களோ அப்போது கொடுங்கள்” என்று மிகவும் நிதானமாகப் பதிலளித்தார். அந்தப் பயணியின் ஆச்சரியத்தைப் பார்த்து, “டபுள் பாசிட்டிவ்” என்று அவர் சிரித்துக்கொண்டே கூறியது காண்போர் அனைவரையும் கவர்ந்துள்ளது.
இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதிலிருந்து லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்டு பாராட்டுகளைப் பெற்று வருகிறது. பணம் மட்டுமே பிரதானம் என்று ஓடும் உலகில், ஒரு முன்பின் தெரியாத நபரிடம் அந்த ஓட்டுநர் காட்டிய அதீத நம்பிக்கையும் கருணையும் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதேபோல, கொல்கத்தாவில் குடிபோதையில் இருந்த ஒரு பெண்ணை பாதுகாப்பாக அவரது வீட்டில் சேர்த்த மற்றொரு டாக்ஸி ஓட்டுநரின் செயலும் தற்போது வைரலாகி வருகிறது.
View this post on Instagram
“>
இத்தகைய எளிய மனிதர்களின் நேர்மறையான செயல்கள், மனிதநேயம் மற்றும் உதவி செய்யும் பண்பு இன்றும் நம்மிடையே மாறாமல் இருப்பதை உறுதிப்படுத்துகின்றன.
