உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள மோதிநகர் பகுதியில், ஒரு சிறிய குடும்பத் தகராறு விபரீதத்தில் முடிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சஞ்சய்புரி கிராமத்தைச் சேர்ந்த விபின் என்பவருக்கும், அவரது மனைவி ஈஷாவுக்கும் இடையே உணவு சமைப்பது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதல் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த ஈஷா தனது கணவர் விபினின் நாக்கைத் கடித்துத் துண்டித்துள்ளார். ரத்த வெள்ளத்தில் துடித்த விபின் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, இருவீட்டாரும் மோதிக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெண்ணின் வீட்டார் அவருக்கு ஆதரவாகப் பேசியதால் இரு தரப்பினருக்கும் இடையே பெரும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து இதுவரை யாரும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை என்றாலும், ஊடகங்கள் மூலம் தகவலறிந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
रात 11 बजे ईशा की उसके पति विपिन की खाना बनाने को लेकर झगड़ा हुआ था!
फिर रात के करीब 1 बजे ईशा ने रसोई से चाकू लाकर पति विपिन की जीभ काट कर अलग कर दी!
सुबह घटना का पता चलते ही आसपास के लोगों की भीड़ लग गई!
पड़ोसियों ने महिला को जमकर पीटा और कमरे में बंद कर दिया!
ईशा और विपिन… pic.twitter.com/ZZajWm2NwL
— Sadaf Afreen صدف (@s_afreen7) January 20, 2026
“>
முறையான புகார் அளிக்கப்பட்டால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
