ஆந்திர மாநிலம் ஆனந்தபூர் அருகே உள்ள லக்ஷ்யம் பள்ளி கிராமத்தில், கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட மோதல் ஒரு பிஞ்சு உயிரைப் பறித்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. ரமேஷ் மற்றும் அவரது மனைவி மகேஷ்வரி ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றி, ஒருகட்டத்தில் அடிதடியாக மாறியது.

இதில் ஆத்திரமடைந்த ரமேஷ், தனது மனைவியைக் கொல்லும் நோக்கத்தில் பெரிய கல்லை எடுத்து அவர் மீது வீசியுள்ளார். துரதிர்ஷ்டவசமாக, அந்தக் கல் குறிதவறி அங்கிருந்த அவர்களது 4 வயது மகனின் தலையில் பலமாகத் தாக்கியது.

இதில் படுகாயமடைந்த குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அந்தக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. பெற்றோரின் கோபத்தால் ஒரு சிறுவன் பலியான இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.