பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிற்கு வருகிற 17-ந் தேதி (சனிக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்க்கெட்டில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் பொங்கல் பண்டிகையைத் தங்களது சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்கு வசதியாக இந்த விடுமுறை வழங்கப்படுவதாக வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜி.டி ராஜசேகர் தெரிவித்துள்ளார்.

காய்கறி மார்க்கெட் அன்றைய தினம் இயங்காது என்றாலும், பழம் மற்றும் பூ மார்க்கெட்டில் உள்ள கடைகள் அனைத்தும் எவ்வித மாற்றமும் இன்றி வழக்கம் போல செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் பூக்கள் மற்றும் பழங்களை வாங்குவதற்குத் தடை இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.