சர்வதேச சந்தையில் நிலவும் விலை நிலவரத்திற்கு ஏற்ப தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. நேற்று தங்கம் விலை அதிகரித்த நிலையில் இன்று விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 1,06,040 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13255 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் அதிகரித்து ஒரு கிராம் 14460 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,15,680 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையில் இன்று மாற்றமின்றி ஒரு கிராம் 235 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,35,0000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.