பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பகுதிநேர ஆசிரியர் கண்ணன், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் விஷம் குடித்ததாகக் கூறப்படும் நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
திமுக அரசு கொடுத்த பொய் வாக்குறுதிகளை நம்பி ஒரு ஆசிரியர் உயிரிழந்திருப்பது வேதனை அளிப்பதாகக் கூறியுள்ள அவர், உயிரிழந்த கண்ணனின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும், போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் யாரும் இதுபோன்ற விபரீத முடிவுகளை எடுக்க வேண்டாம் என்றும் அவர் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளார்.
