ஈரானில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கம் காரணமாக, அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளன.
இந்த போராட்டம் தற்போது மிகத் தீவிரமடைந்துள்ள நிலையில், வன்முறை சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,500-ஐத் தாண்டியுள்ளது.
இதனால் அங்கு அசாதாரணமான சூழல் நிலவி வருகிறது. நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, ஈரானில் வசிக்கும் இந்தியர்கள் அனைவரும் உச்சகட்ட பாதுகாப்புடன் இருக்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், அங்குள்ள இந்தியர்கள் தங்களுக்குக் கிடைக்கும் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தி உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
