சமூக வலைதளங்களில் லைக்ஸ் மற்றும் வியூஸ்கள் வாங்குவதற்காகப் பலர் ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது.

அந்த வகையில், இந்தோனேசியாவைச் சேர்ந்த பிரபல கண்டென்ட் கிரியேட்டர் ‘ஜேஜாக் சி ஏடன்’ (Jejak Si Aden), காட்டில் ஆற்றங்கரம் அருகே அமர்ந்து கொண்டு ஒரு விஷப் பாம்புடன் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது, மிகுந்த தன்னம்பிக்கையுடன் அந்தப் பாம்பின் முகத்திற்கு அருகே தனது முகத்தைக் கொண்டு சென்று முத்தம் கொடுக்க முயன்றார்.

அடுத்த நொடியே மின்னல் வேகத்தில் பாய்ந்த அந்தப் பாம்பு, ஏடனின் உதட்டைப் பிடித்துக் கொண்டது. பாம்பின் பற்கள் உதட்டில் ஆழமாகப் பதிந்ததால் வலியால் துடித்த அவர், ஒரு வழியாகப் பாம்பை இழுத்துத் தூக்கி எறிந்தார்.

பார்ப்பவர்களுக்கே ரத்தத்தை உறைய வைக்கும் இந்த வீடியோ இப்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. ஏற்கனவே ஒருமுறை ஸ்டண்ட் செய்தபோது இதேபோல பாம்பு கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் தான் இந்த ஏடன் என்பது குறிப்பிடத்தக்கது. “பாம்போடு விளையாடினால் இதுதான் கதி” என நெட்டிசன்கள் இவரைச் செம கலாய் கலாய்த்து வருகின்றனர்.