இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சீக்கியப் பெண், சமூக வலைதளம் மூலம் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு இளைஞருடன் காதலில் விழுந்துள்ளார்.
தன் காதலனைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற ஆசையில், முறையான விசா அல்லது ஆவணங்கள் எதுவுமின்றி சட்டவிரோதமாக எல்லை தாண்டி பாகிஸ்தானுக்குள் நுழைய முயன்றுள்ளார்.
அப்போது எல்லையில் பாதுகாப்புப் பணியில் இருந்த அதிகாரிகள், சந்தேகத்தின் பேரில் அந்தப் பெண்ணைப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் காதலனுக்காக எல்லை தாண்டியது தெரியவந்தது.
உடனடியாக அந்தப் பெண்ணைக் கைது செய்த அதிகாரிகள், அவரிடம் வேறு ஏதேனும் உள்நோக்கம் உள்ளதா அல்லது உளவு பார்க்கும் வேலைகளில் ஈடுப்பட்டாரா என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
எல்லையில் நிலவும் பதற்றமான சூழலில், ஒரு பெண் காதலுக்காக இப்படித் துணிச்சலாக எல்லை தாண்ட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
