சமூக வலைதளங்களில் நாள்தோறும் பலவிதமான திருமண வீடியோக்கள் வைரலாவது வழக்கம். ஆனால், எக்ஸ் (X) தளத்தில் ‘இந்திரஜித் நிஷாத்’ என்பவரால் ஜூன் 26 அன்று பகிரப்பட்டு வைரலாகி வரும் ஒரு வீடியோ, பார்ப்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தனது வாழ்நாளின் மிக முக்கிய நாளான திருமணத்தன்று, மணமகன் ஒருவர் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு போதையில் மிதந்தபடி திருமண மேடைக்கு வந்துள்ளார்.
வாசலில் திருமண சடங்குகள் தொடங்கவிருந்த நேரத்தில், மணமகன் போதையில் நேராக நிற்கக்கூட முடியாமல் கால்கள் தடுமாறி, அங்கிருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களின் பிடியையும் மீறி தரையில் அமர்ந்து ரகளை செய்யத் தொடங்கியுள்ளார். மணமகனின் இந்த மோசமான நிலையைக் கண்ட மணமகள், ஒரு நொடி கூட யோசிக்காமல் இந்தத் திருமணமே தனக்கு வேண்டாம் என்று கூறி, கல்யாணத்தை அதிரடியாக நிறுத்தியுள்ளார்.
शादी का दिन बारात दरवाज़े पर द्वार पूजा की रस्में शुरू होने ही वाली थीं!
दूल्हा अपनी ज़िंदगी के सबसे बड़े मोड़ पर खड़ा था, लेकिन अगले ही पल उसने ऐसी हरकत कर दी कि पूरी बारात को यू-टर्न लेना पड़ गया!
नशे में दूल्हे का ऐसा हाल था कि वह ठीक से खड़ा तक नहीं हो पा रहा था यह देखते… pic.twitter.com/EpASIkwieG
— Indrajeet Nishad (@NishadIndra1) June 26, 2026
போதை ஆசாமியான மணமகனைச் சமாளிக்க முடியாமல் அவரது குடும்பத்தினர் திணறிய நிலையில், மணமகளின் உறுதியான முடிவால் ஒட்டுமொத்த திருமண ஊர்வலமும் மணமகள் இன்றி வெறும் கையோடு ஊருக்குத் திரும்ப வேண்டியதாயிற்று. இந்தத் திருமண வீடியோ எக்ஸ் தளத்தில் வெளியாகி சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது.
வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் பலரும் மணமகனின் இத்தகைய பொறுப்பற்ற செயலுக்குக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில், “திருமணத்தன்றே இப்படிச் செய்பவர், வருங்காலத்தில் எப்படி குடும்பம் நடத்துவார்? வாழ்க்கைப் பிரச்சனை என்பதால் மணமகள் எடுத்த முடிவு 100 சதவிகிதம் சரியானது” என்று கூறி மணமகளின் தைரியத்தைப் பாராட்டி கமெண்டுகளைக் குவித்து வருகின்றனர்.
