சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்து, முதலமைச்சர் விஜய் அலுவலகத்தை நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு மாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், பணிகள் முடிவடையும் தருவாயில் டெண்டர் வெளியிடப்பட்டிருப்பது பொதுப்பணித்துறை வட்டாரத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் முதலமைச்சர் அலுவலகத்தை அமைப்பதற்காக ‘மாணிக்கம் அண்ட் கோ’ என்ற ஒப்பந்த நிறுவனம் கடந்த 15 நாட்களுக்கும் மேலாகச் சீரமைப்புப் பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. தற்போது 90 சதவீதப் பணிகள் நிறைவடைந்து, வெறும் 10 சதவீத வேலைகள் மட்டுமே எஞ்சியுள்ளன. பணிகள் முடியும் நிலையை எட்டியுள்ள நிலையில், கடந்த 12-ஆம் தேதி பொதுப்பணித்துறை தரப்பில் நாமக்கல் கவிஞர் மாளிகை 10-வது தளப் பணிகளுக்காக திடீரென டெண்டர் கோரப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு நிறுவனம் பெரும்பான்மையான வேலைகளை முடித்துவிட்ட நிலையில், அனைத்து ஒப்பந்ததாரர்களும் எவ்வாறு இதில் பங்கேற்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஐந்து லட்சத்திற்கும் அதிகமான பணிகளுக்கு விதிகளின்படி டெண்டர் அவசியமென்றாலும், ரூ. 5 கோடி மதிப்பிலான இத்திட்டத்தில் பணிகள் தொடங்குவதற்கு முன்பே டெண்டர் வெளியிடப்பட்டிருக்க வேண்டும்.
முதல்வர் விஜய் அறை மாற்ற வேலை 90 சதவீதம் முடிவடைந்த நிலையில் கடந்த 12ம் தேதி டெண்டர் விட்டதன் மர்மம் என்ன?: பொதுப்பணித்துறையில் சர்ச்சை: சென்னை தலைமைச் செயலகத்தில் ஜார்ஜ் கோட்டையில் இருந்து நாமக்கல் கவிஞர் மாளிகை பத்தாவது மாடிக்கு முதல்வர் விஜய் அலுவலக மாற்றப்படவிருக்கிறது.… pic.twitter.com/HAcHBmJAT2
— தங்க.காளிப்பாண்டி (@sureshkalipandi) August 15, 2026
“>
மாறாக, 90 சதவீத வேலைகள் முடிந்த பிறகு டெண்டர் அறிவிக்கப்பட்டிருப்பது இதுவொரு முறைகேடான டெண்டர் என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளதோடு, அரசின் நற்பெயருக்கும் களங்கம் விளைவிப்பதாக இருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
