தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானப் பெட்டிகள் மீது வசூலிக்கப்பட்டு வந்த “கட்சி நிதி” முறையை ஒழித்து, அதனை நேரடியாக அரசு கணக்கில் சேர்ப்பதன் மூலம் ஆண்டுக்கு கூடுதலாக ரூ.1,200 கோடி வருவாய் ஈட்ட தமிழக அரசு புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதுவரை மாதந்தோறும் தோராயமாக ரூ.100 கோடி வரை ஹாட், பீர் மற்றும் ஒயின் பெட்டிகளுக்கு முறையே ரூ.90, ரூ.40, ரூ.20 என வசூலிக்கப்பட்டு வந்த தொகை, இனி எவ்வித இடைத்தரகர்களுமின்றி நேரடியாக அரசு கஜானாவிற்குச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த அதிரடி நடைமுறை மாற்றத்தின் மூலம் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைப்பது உறுதிசெய்யப்பட்டுள்ள போதிலும், மதுபானக் கொள்முதல் நடைமுறைகளில் நிலவி வரும் எதேச்சதிகாரப் போக்கு மாறவில்லை என்ற கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அரசுக்கு கூடுதல் வருவாய் வரும் வழிகள் கண்டறியப்பட்டாலும், குறிப்பிட்ட சில நிறுவனங்களின் ஆதிக்கமே டாஸ்மாக்கில் இன்னும் நீடிப்பதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
குறிப்பாக, ‘ஜூனியர் விகடன்’ இதழில் வெளியான புலனாய்வுச் செய்திகளின்படி, உதயநிதி மற்றும் ரதீஷ் ஆகியோரின் ஆதரவு பெற்றதாகக் கூறப்படும் கால்ஸ் (Midas / Kals), எஸ்.என்.ஜெ (SNJ), என்ரிக்கா (Enrica) போன்ற குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கே தொடர்ந்து கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்டு வருவது நிர்வாக வெளிப்படைத்தன்மையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. ‘இதர மாநிலங்களில் தங்கு தடையின்றிக் கிடைக்கும் பல்வேறு தரமான மது வகைகள் ஏன் தமிழகத்தில் அனுமதிக்கப்படுவதில்லை, வேறு உற்பத்தியாளர்களே இல்லையா?’ என்று சவுக்கு சங்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் , ரதீஷ் என்பவரின் ஆதிக்கம் இன்னும் திரைமறைவில் தொடர்வதாகவும், இந்த ஒருதலைப்பட்சமான கொள்முதல் முறைகேடுள் என்று பிரபல அரசியல் விமர்சகரும் யூடியூபருமான சவுக்கு சங்கர் தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.
அரசுக்கு கூடுதல் வருவாய் வந்தாலும், உதயநிதி மற்றும் ரதீஷ் ஆசி பெற்ற அதே கால்ஸ், எஸ்.என்.ஜெ, என்ரிக்கா நிறுவங்களிடம் கொள்முதல் ஆணைகளை தொடர்ந்து வழங்குவது ஊழல் இல்லையா ?
வேறு மதுபான உற்பத்தியாளர்கள் இல்லையா ?
இதர மாநிலங்களில் கிடைக்கும் மது வகைகள் ஏன் தமிழகத்தில் கிடைப்பதில்லை… pic.twitter.com/NwAdIH5USY
— Savukku Shankar (@SavukkuOfficial) June 8, 2026
