இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் மறைவு ஒட்டுமொத்தத் தமிழ் திரையுலகினரையும் நிலைகுலையச் செய்துள்ளது. பாரதிராஜாவின் இயக்கத்தில் நடித்த பல முன்னணி நட்சத்திரங்களும் தங்களது குருவை இழந்து தவித்து வருகின்றனர். அந்த வகையில், மூத்த நடிகர் விஜயகுமார், இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மறைவுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலை மிகவும் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். பாரதிராஜாவின் மறைவு தனக்கு ஈடு செய்ய முடியாத பெரும் இழப்பு என்று அவர் கண்ணீருடன் குறிப்பிட்டுள்ளார்.
பாரதிராஜாவுடனான தனது சினிமா நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட நடிகர் விஜயகுமார், தான் பாரதிராஜாவின் இயக்கத்தில் இரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், தனக்கு நடிப்பை முழுமையாகச் சொல்லிக் கொடுத்தவர் அவர்தான் என்று நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார். மேலும், பாரதிராஜா தனக்கு இயக்குநர் மட்டுமல்லாமல், ஒரு சிறந்த நண்பராகவும் திகழ்ந்தார் என்றும், இந்த உலகம் உள்ளவரை அவரது புகழும் சாதனைகளும் நிலைத்து நிற்கும் என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
