“பாரதிராஜா ஒரு குழந்தை மாதிரி.. உன்னை எனக்கு பிடிக்கும், ஆனா உன் நடிப்பு எனக்கு பிடிக்காதுனு என் முகத்துக்கே நேரா சொல்லிடுவாரு” என மறைந்த ‘இயக்குனர் இமயம்’ பாரதிராஜாவுடனான தனது 50 ஆண்டுகால நட்பு மற்றும் உணர்ச்சிப்பூர்வமான நினைவலைகளை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பகிர்ந்துள்ளார்.

சென்னையில் காலமான இயக்குனர் பாரதிராஜாவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், எதையும் ஒளிவு மறைவின்றி நேரடியாகப் பேசும் அவரது வெள்ளந்தியான குணத்தைப் பாராட்டி உருகினார்.

மேலும், சினிமா உலகில் நடிகர்கள், இயக்குனர்கள் என யாருக்கு எந்தப் பிரச்சனை என்றாலும் முதல் ஆளாக களத்தில் நின்று குரல் கொடுக்கும் சிங்கம் போன்றவர் பாரதிராஜா என்றும், எண்ணற்ற கலைஞர்களை திரையுலகிற்கு அறிமுகம் செய்து அவர் உருவாக்கிய சகாப்தம் மக்களின் இதயங்களில் என்றென்றும் வாழும் என்றும் ரஜினிகாந்த் கண்கள் கலங்கியபடி தெரிவித்தார்.

“>