“தமிழக வெற்றிக் கழகத்தின்  கல்வி விருது விழாவின் போது மாணவி ஒருவருக்கு அளித்த நெகிழ்ச்சியான வாக்குறுதியை, அக்கட்சியின் முக்கிய தலைவரும் தற்போதைய த.வெ.க அரசின் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா தற்பொழுது நேரில் சென்று நிறைவேற்றியுள்ளார்.

சென்னை ஐ.ஐ.டி-யில் (IIT Madras) உயர்கல்வி பயின்று வரும் பழங்குடியினத்தைச் சேர்ந்த  கல்வி விருது பெற்ற மாணவியின் வீட்டிற்குச் சென்ற அமைச்சர், அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

த.வெ.க நடத்திய கல்வி விருது வழங்கும் மேடையில், ‘கண்டிப்பா ஒரு நாள் உங்க வீட்டுக்கு வருவேன்’ என்று தமக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கொடுத்த வாக்குறுதியை தற்பொழுது சற்றும் எதிர்பாராத வகையில் தனது வீட்டிற்கே வந்து நிறைவேற்றியுள்ளார் என்று அந்த மாணவி தற்பொழுது கண்ணீர் மல்க நெகிழ்ச்சியான பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

“>

 

எளிய பின்னணியைக் கொண்ட ஒரு பழங்குடியின மாணவியின் வீட்டிற்கு அமைச்சர் நேரில் சென்று தனது வாக்குறுதியை ஆற்றியுள்ள இந்தச் செயல், சமூக வலைதளங்களிலும் மக்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் குவித்து வருகிறது.”