கோவை அருகே வடவள்ளியில் நிறுத்தப்பட்டிருந்த மினிபஸ் ஒன்றில், இளம் ஜோடி ஒன்று அத்துமீறி நுழைந்து உல்லாசத்தில் ஈடுபட்ட அதிர்ச்சி சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடவள்ளியில் இரவு நேரத்தில் வழக்கம்போல நிறுத்தப்பட்டிருந்த அந்த மினிபஸ்சுக்குள் ஒரு இளம்பெண்ணும், வாலிபரும் நள்ளிரவு 12 மணிக்கும் மேல்  ரகசியமாக ஏறியுள்ளனர். உள்ளே சென்றதும் அந்த வாலிபர், பஸ்சுக்குள் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவைத் தன் கைவாரியாக வேறு பக்கம் திருப்பி வைத்துள்ளார்.

அதன்பின்னர், இருவரும் பஸ்ஸின் தரையில் துணியை விரித்துப் படுத்துக்கொண்டு, நீண்ட நேரம் உல்லாசமாக இருந்துள்ளனர். கிட்டத்தட்ட 45 நிமிடம் கழித்து தங்களது ஆடைகளைச் சரிசெய்துகொண்டு, ஒன்றும் தெரியாதது போல ஜாலியாக பஸ்சை விட்டு இறங்கிச் சென்றுள்ளனர்.

மறுநாள் காலையில் பஸ் டிரைவரும், நடத்துனரும் வழக்கம்போல வந்து பஸ்ஸில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோதுதான் இந்த பகீர் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கேமராவைத் திருப்பினாலும், அந்த ஜோடி பஸ்ஸிற்குள் ஏறுவது, துணி விரிப்பது, கேமராவைத் திருப்புவது மற்றும் ஆடைகளைச் சரிசெய்துவிட்டு வெளியேறுவது வரையிலான அனைத்து காட்சிகளும் கேமராவில் தெளிவாகப் பதிவாகியிருந்தது.

தற்போது இந்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வைரலாகி வருகிறது. பஸ்சுக்குள் அத்துமீறி நுழைந்து அநாகரீகமாக நடந்துகொண்ட அந்த ஜோடி யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்று இன்னும் தெரியவில்லை. மேலும் பஸ்சுக்குள் இருந்த காஸ்ட்லி இன்ஜின் மற்றும் ஒரு சீட் ஆகியவற்றையும் அவர்கள் திருடிக் கொண்டு சென்றுள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.