கேரள மாநிலம் கொல்லம் கடற்கரையில் பார்ப்போரின் நெஞ்சை உறைய வைக்கும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த மூன்று சிறுவ சிறுமிகளை எதிர்பாராத விதமாக வந்த ராட்சத அலை கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் அலறியடித்தனர்.​சற்றும் தாமதிக்காமல், அங்கே இருந்த இளைஞர்கள் சிலர. தங்கள் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் சீறிப்பாய்ந்த அலைகளுக்குள் குதித்தனர்.

கடலின் ஆக்ரோஷமான அலைகளுடன் போராடி, அந்த மூன்று குழந்தைகளையும் பத்திரமாக மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர். இந்த வீரதீரச் செயல் அங்கிருந்த கேமராவில் பதிவாகி, தற்போது எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி வருகிறது. உரிய நேரத்தில் செயல்பட்டு மூன்று பிஞ்சு உயிர்களைக் காப்பாற்றிய அந்த இளைஞர்களுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.