உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலைக் காண ஆசையாக வந்த அமெரிக்க மற்றும் வெளிநாட்டுப் பயணிகள், அங்கிருந்த குப்பைகளையும் துர்நாற்றத்தையும் கண்டு முகம் சுளிக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தாஜ்மகாலைச் சுற்றி தேங்கியுள்ள கழிவுகள் மற்றும் யமுனை நதியில் மிதக்கும் குப்பைகள் இந்தியாவின் பிம்பத்திற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்காவிலிருந்து வந்த பயணிகள் தாஜ்மகாலின் அழகைக் ரசிக்கச் சென்றபோது, அதன் பின்னால் ஓடும் யமுனை நதி சாக்கடை போலக் காட்சியளிப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

நதியில் மிதக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் அங்கிருந்து வீசும் கடுமையான துர்நாற்றம் காரணமாகப் பயணிகள் மூக்கைப் பொத்திக் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. “அதிசயத்தைப் பார்க்க வந்த இடத்தில் இப்படி ஒரு அவலமா?” என்று அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். வறுமை ஒருபுறம் இருந்தாலும், ஒரு உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலத்தை இவ்வளவு அசுத்தமாக வைத்திருப்பது வேதனையளிப்பதாக நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.