தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம், கூடலூரில் உள்ள செயின்ட் தாமஸ் இங்கிலீஷ் உயர்நிலைப்பள்ளியின் பொன்விழா கொண்டாட்டத்தில் இன்று (ஜனவரி 13, 2026) நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தப் பொன்விழா கொண்டாட்டத்துடன் இணைந்து நடைபெற்ற பொங்கல் விழாவில் ராகுல் காந்தி கலந்துகொண்டார். விழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே திடீரென மழை பெய்யத் தொடங்கியது.
மழைக்காக குடை பிடித்தபோது சட்டென்று ராகுல் காந்தி செய்த செயல்..!#Nilgiris | #RahulGandhi | #Pongal | #School | #Congress pic.twitter.com/Ad4NOcoaIv
— PttvOnlinenews (@PttvNewsX) January 13, 2026
அப்போது ராகுல் காந்தி மழையில் நனைவதைப் பார்த்த அவரது உதவியாளர் மற்றும் அருகே இருந்தவர்கள், உடனடியாகக் குடையை விரித்து அவருக்குப் பிடிக்க முயன்றனர். ஆனால், ராகுல் காந்தி “வேண்டாம், இல்லை” என சைகை காட்டி மறுத்துவிட்டார். மற்றவர்களுடன் சேர்ந்து தானும் மழையிலேயே நனைந்தபடி அந்த விழாவில் தொடர்ந்து பங்கேற்றார். அதிகாரத்தையும் பாதுகாப்பையும் கடந்து அவர் காட்டிய இந்த எளிமையான அணுகுமுறை தற்போது வீடியோவாகப் பகிரப்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
