சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், தாயும் அவரது குழந்தையும் ஒரு படகில் அமர்ந்து பயணம் செய்து கொண்டிருக்கின்றனர். அப்போது அந்தத் தாயின் கையில் பளபளக்கும் ஒரு விலைமதிப்பற்ற ஐபோன் இருக்கிறது. அவர் போனில் ஏதோ பார்த்துக் கொண்டிருக்க, அருகில் இருக்கும் குழந்தையின் கண்ணில் அந்த போன் படுகிறது. நொடிப் பொழுதில் அந்த குழந்தை, தாயின் கையில் இருந்த ஐபோனைப் பிடுங்கி அப்படியே ஆழமான தண்ணீருக்குள் தூக்கி வீசுகிறது.
இதைப் பார்த்த அந்தத் தாய் அதிர்ச்சியில் உறைந்து போகிறார். அனைத்தும் கண் இமைக்கும் நேரத்தில் நடந்ததால், அவரால் போனைத் தடுக்கவும் முடியவில்லை, தண்ணீரில் மூழ்கிய போனை மீட்கவும் முடியவில்லை. ஆனால், தான் செய்தது எவ்வளவு பெரிய நஷ்டம் என்று தெரியாத அந்தப் பிஞ்சு குழந்தை, போனைத் தூக்கிப் போட்டுவிட்டு ஜாலியாக சிரிக்கிறது.
Kid throws his mom’s iPhone into the lake during a boat ride 😂 pic.twitter.com/Bg22E4J2Vs
— Tehxi (@yajnshri) June 18, 2026
எக்ஸ் (X) தளத்தில் ‘Tehxi’ என்ற கணக்கில் ஜூன் 18 அன்று பதிவிடப்பட்ட இந்த வீடியோ, தற்போது 5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது. வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “இந்த குழந்தைக்கு வீட்டுக்கு போனதும் அம்மாவோட கையால பலமான கவனிப்பு இருந்திருக்கும்”, “இது வாழ்நாளின் மிக விலையுயர்ந்த நினைவு”, “குழந்தைகளிடம் இருந்து போனை எப்போதும் தள்ளியே வைக்க வேண்டும்” எனப் பலவாறாக கமெண்ட் செய்து சிரித்து வருகின்றனர்.
