மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் உள்ள எம்பி நகர் பகுதியில், இளைஞர் ஒருவர் திடீரென மின் கம்பத்தில் ஏறியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் அந்த இளைஞர் உயரமான மின் கம்பத்தின் உச்சிக்குச் சென்றதைக் கண்ட பொதுமக்கள், அதிர்ச்சியடைந்து உடனடியாக காவல்துறையினருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இந்த வினோதமான மற்றும் ஆபத்தான சம்பவத்தைக் காண அந்தப் பகுதியில் நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றுதிரண்டதால், அங்கு பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

“>

இதனால் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர், மின்சார வாரியத்தின் உதவியுடன் உடனடியாக அப்பகுதியில் மின் இணைப்பைத் துண்டித்தனர். அதன் பின்னர், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அந்த இளைஞரை பத்திரமாக மீட்டு கீழே கொண்டு வந்தனர்.

இந்த மீட்பு நடவடிக்கையின் போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த இளைஞர் எதற்காக மின் கம்பத்தில் ஏறினார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.