பள்ளிக் கூடம் என்பது குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கும் இடம் என்ற நம்பிக்கையைச் சிதைக்கும் வகையில் ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டுள்ள இந்தக் காணொளியில், ஆசிரியர் ஒருவர் ஒரு சிறு குழந்தையை எந்தவித இரக்கமுமின்றி மிகக் கடுமையாகத் தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. ஆசிரியரே குழந்தையைத் தாக்கும் இந்தக் கொடூரத்தைப் பார்த்த நெட்டிசன்கள் கடும் ஆத்திரமடைந்துள்ளனர்.
School used to be the one place we knew our kids were safe. pic.twitter.com/rUsqOgSQ3K
— AD (@ADRWC) January 12, 2026
“கல்வி கற்க வேண்டிய இடத்தில் இப்படியா ஒரு பிஞ்சு குழந்தையை வதைப்பது?” என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. பாதுகாப்பான சூழலில் இருக்க வேண்டிய குழந்தைகள் இப்படி வன்முறைக்கு ஆளாவது பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
