சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, பார்ப்பவர்களின் அதிர்ச்சி அடைய வைத்த அந்த வீடியோவில், ஒரு வனவிலங்கு ஊழியர் ராட்சத அனகோண்டா ஒன்றின் திறந்த வாய்க்குள் தனது தலையை நுழைத்து ஆபத்தான சாகசத்தில் ஈடுபடுகிறார்.
அமைதியாக இருக்கும் என்று அவர் எதிர்பார்த்த அந்தப் பாம்பு, திடீரென ஆக்ரோஷமடைந்து அவரது தலையை இறுகப் பிடித்துக் கொண்டது. அருகில் இருந்த மற்ற ஊழியர்கள் அவரை மீட்கப் போராடும் இந்த 15 வினாடி காட்சி, ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
இந்த அதிர்ச்சியூட்டும் வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், இது போன்ற உயிருக்கு ஆபத்தான செயல்கள் தேவையற்றவை என்றும், இது ஒரு முட்டாள்தனமான முயற்சி என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதே சமயம், அனகோண்டாவின் அசுர பலத்தையும் அதன் உருவத்தையும் பார்த்த சில பயனர்கள், இது நிஜமான வீடியோ தானா அல்லது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டதா என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளனர்.
— Stella Fisher (@StellaFish24481) January 4, 2026
“>
எது எப்படியோ, ஆபத்தான விலங்குகளுடன் விளையாடுவது எவ்வளவு விபரீதமானது என்பதற்கு இந்த வீடியோ ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
